விருதுநகர் மாவட்டம் ஒருங்கிணந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பாக முதுகலை ஆசிரியர்களுக்கான SCOPE ஒரு நாள் பயிற்சி சிவகாசி கம்மாவர் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 10 பள்ளிகளில் இருந்து இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல்,கணிதம் ஆகிய பாட முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியினை விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தொடஙகி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட உதவித்திட்ட அலுவலர் பயிற்சி நோக்கத்தையும் எவ்வாறு மாணவர்களிடம் செயல்திட்டம் கொண்டு செல்ல வேண்டும் என உதவி மாவட்ட திட்ட அலுவலர் (எஸ் எஸ் எ) என விளக்கினார். மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ( ஆர்.எம்.எஸ்.ஏ ) கருத்தாளர்களை அறிமுகம் செய்தார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட ஒருஙகினைப்பாளர் மற்றும் திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட ஒருஙகிணைப்பாளரும் செய்திருந்தனர்.


No comments:
Post a Comment