9 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு
வருகின்ற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் தேதி வகுப்பிற்கு பள்ளி திறப்பு!
9 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு
வருகின்ற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் தேதி வகுப்பிற்கு பள்ளி திறப்பு!
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிக்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழக சட்டசபைக்கு, மே, 25க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, மார்ச்சில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. பயிற்சி வகுப்புகொரோனா காரணமாக, ஒரு ஓட்டுச்சாவடியில், அதிகபட்சம், 1,000 வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
எனவே, கூடுதலாக, 23 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், தேர்தல் பணியில் கூடுதல் பணியாளர்கள், போலீசாரை ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் கூடுதலாக தேவை.இவற்றை மாவட்ட வாரியாக கணக்கிட்டு, தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. அவற்றை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, நான்கு நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், தேர்தல் வழக்கு வராத வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அவர்களுக்கு விளக்கப் பட்டுள்ளது.விரைவில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் போன்றோருக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில், நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.பழுதுமுதற்கட்டமாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்காக, தனி, 'மொபைல் ஆப்' உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மொபைல் ஆப் வழியே, எந்த ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது, எங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், பழுது ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, எவ்வளவு ஓட்டுகள் பதிவாகி உள்ளன என்ற விபரங்களை, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி தொடர்பான தகவல்களை, மொபைல் ஆப் வழியே, உயர் அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.இந்த மொபைல் ஆப்பில் எந்த விதமான விபரங்களை சேர்க்கலாம் என, அனைத்து மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் கருத்து கேட்டுள்ளது
தேசிய அளவில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. சிவகாசியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள்
NCSc project students and school name selection for National level competition. Congratulations for students and teachers and parents. For their details send later. Participate certificate before 10.th February
Today online webinar link @ 11.30 am
https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_ZmM4ZmE4ZjQtNjA0ZS00NGMzLWIwMGEtNWJhMGU3Nzk0OTZm%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%222d21a2dd-bd8b-453a-8b16-3b2217c1a767%22%2c%22Oid%22%3a%22733bd5ee-d9d4-4123-8378-50ea5eb4ee25%22%7d
அன்பிற்கினிய ஆசிரிய நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்,தமிழ்நாடு டிஜிட்டல் டீமின் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி இதுவரை 91 வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்திருக்கும் என நம்புகிறேன் . தற்போது, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 24.01.2021 அன்று நடைபெறும் பயிற்சியில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு சான்றிதழ் வேக்லட் நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScBF3HmPCVrESMOhvufcDLSA0hExIarg2Bl4qUdfsMmFVVmEg/viewform?usp=pp_url
*Respected HMs,*
Kind attention pls
Being the first day, Initial level learning Assessment commences after lunch today at 1:30pm to make it convenient for the students.
We may have one session today and wherever it’s possible they can do the second session.
Initial Learning Level Assessment
User ID - Student’s EMIS ID
Password -last four digits of EMIS ID@year of birth of the student.
DC(EMIS),
Virudhunagar.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அதற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
2020-21 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 40 உயர்நிலைப்பள்ளிகள் பட்டியல் வெளியீடு!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு இணையவழியில் நடைபெறுகிறது. 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். 20ஆம் தேதி துவங்கி 22 வரை ஏராளமான நிகழ்வுகள் உள்ளது. குழந்தை விஞ்ஞானிகள் அனைவரையும் வாழ்த்துங்கள்.... வழிகாட்டி ஆசிரியர்களை பாராட்டுங்கள்... பெற்றோர்ளை உற்சாகப்படுத்துங்கள்.....
முகநூல்,youtube வழியாக நிகழ்வுகளைக் காணலாம்......
அன்புடன்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
- பாலகிருஷ்ணன்
#JUSTIN : பஸ் பாஸ் இல்லையென்றாலும், பள்ளி சீருடையில் மாணவர்கள் வந்தாலே பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்
* உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகே வகுப்புகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் - கண்ணப்பன்
#schoolsreopening | #TNStudents
_*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2020-21 ஆம் கல்வியாண்டு – விளையாட்டு மற்றும் உடற்கல்வி – பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின் படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்!!!*_
☝️☝️☝️
*நாளை முதல் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறந்து வைக்க வேண்டும்.*
*அப்பள்ளிகளில் பணியாற்றுகிற அனைத்துவகை (SG, BT, PG, HM, etc) ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தந்தாக வேண்டும்.*
*அவர்களனைவரும் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும்.*
*குறிப்பு:-*
*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தற்போதைய நடைமுறை வழக்கத்தில் உள்ளது போல், சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகைதந்து, பள்ளித் தூய்மை மற்றும் பள்ளிப் பாதுகாப்பை உறுதி செய்த வண்ணம் இருக்கவும்....👍👍👍🙏🏻*
TAMILNADU SCIENCE FORUM. VIRUDHUNAGAR DISTRICT, NCSC 2021
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2020
மாவட்ட அளவில் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் போட்டியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல்!
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளினை #தேசிய_இளைஞர்_தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது.
Friends let us celebrate youth day by participating in this quiz about swami vivekananda.
My daughter K.Bitundhavani and K.Sugithavani also participated and enjoyed the quiz.
You can get a valuable certificate from TNOU by participating in this quiz
Quiz link
http://quiz.tnouniv.com/
*தொடக்கக் கல்வி 20 - 21 ம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு..
Standard Kalvi Tv Videos in Page
Seventh kalvi tvbvide Click Here to View All Videos
7th kalvi Tv Videos - Science - Click Here to View All Videos
7th kalvi Tv Videos - Social Science - Click Here to View All Videos
8th Standard Kalvi Tv Videos in Single Page
8th kalvi Tv Videos - Tamil - Click Here to View All Videos
8th kalvi Tv Videos - English - Click Here to View All Videos
8th kalvi Tv Videos - Maths - Click Here to View All Videos
8th kalvi Tv Videos - Science - Click Here to View All Videos
8th kalvi Tv Videos - Social Science - Click Here to View All Videos
9th Standard Kalvi Tv Videos in Single Page
9th kalvi Tv Videos - Tamil - Click Here to View All Videos
9th kalvi Tv Videos - English - Click Here to View All Videos
9th kalvi Tv Videos - Maths - Click Here to View All Videos
9th kalvi Tv Videos - Science - Click Here to View All Videos
9th kalvi Tv Videos - Social Science - Click Here to View All Videos
10th Standard Kalvi Tv Videos in Single Page
10th Std Kalvi Tv Videos - Tamil - Click here For All Videos
10th Std Kalvi Tv Videos - English - Click here For All Videos
10th Std Kalvi Tv Videos - Maths - Click here For All Videos
10th Std Kalvi Tv Videos - Science - Click here For All Videos
10th Std Kalvi Tv Videos - Social Science - Click here For All Videos
11th Standard Kalvi Tv Videos in Single Page
11th Standard Kalvi Tv Videos - Tamil - Click Here For All Videos
11th Standard Kalvi Tv Videos - Physics - Click Here For All Videos
11th Standard Kalvi Tv Videos - Chemistry - Click Here For All Videos
11th Standard Kalvi Tv Videos - Maths - Click Here For All Videos
11th Standard Kalvi Tv Videos - Zoology - Click Here For All Videos
11th Standard Kalvi Tv Videos - Bio Zoology - Click Here For All Videos
11th Standard Kalvi Tv Videos - History - Click Here For All Videos
11th Standard Kalvi Tv Videos - Commerce - Click Here For All Videos
11th Standard Kalvi Tv Videos - Accountancy - Click Here For All Videos
12th Standard Kalvi Tv Videos in Single Page
12th Standard Kalvi Tv Videos - Tamil - Click Here For All Videos
11th Standard Kalvi Tv Videos - Physics - Click Here For All Videos
12th Standard Kalvi Tv Videos - Chemistry - Click Here For All Videos
12th Standard Kalvi Tv Videos - Bio Botany - Click Here For All Videos
12th Standard Kalvi Tv Videos - Bio Zoology - Click Here For All Videos
12th Standard Kalvi Tv Videos - History - Click Here For All Videos
12th Standard Kalvi Tv Videos - Economics - Click Here For All Videos
12th Standard Kalvi Tv Videos - Political Science - Click Here For All Videos
*கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் கவனத்திற்கு,*
-SMC/SMDC பயிற்சியில் ஒவ்வொரு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரும், ஆசிரியரும் பங்கேற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
-ஈராசிரியர் பள்ளிகளில் தலைமையாசிரியர்/ ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தால், அதை Vacant ஆக Google Spreadsheet இல் ஆசிரியர் பயிற்றுநர்கள் பதிவு செய்ய வேண்டும்.
-ஈராசிரியர் பள்ளியில் மாற்றுப்பணியில் (Deputation) இருக்கும் ஆசிரியர் கண்டிப்பாக SMC பயிற்சியை முடித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
-ஈராசிரியர் பள்ளிகள் தவிர்த்து மற்ற பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருந்தால், தலைமையாசிரியருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர் இப்பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
-நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை பொறுத்தவரை, கண்டிப்பாக 2 ஆசிரியர்கள் SMC/SMDC பயிற்சியை முடித்திருக்க வேண்டும். Vacant காட்டக்கூடாது.
-சில பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவருமே இப்பயிற்சியினை விருப்பத்தின் பேரில் முடித்திருப்பது பாராட்டத்தக்கது.
*முதன்மைக்கல்வி அலுவலர்,*
*விருதுநகர் மாவட்டம்.*
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறைத்தேர்வு அறிவிப்பு!
மேலும் விபரஙகளுக்கு கீழுள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.
https://drive.google.com/file/d/17ISsHvmJFTB2suPUueovwx39dA_DJHxb/view?usp=drivesdk
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு – 2020
அன்புடையீர்
வணக்கம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான விருதுநகர் மாவட்ட மாநாடு ஜனவரி 8ஆம் தேதி இணைய வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள து தாங்கள் பதிவு செய்து ள்ள மாணவர்களை அவசியம் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இனணயவழி மாநாட்டில் பங்கேற்றால் மட்டுமே மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இயலும்.
நாள் :- 08.01.2021 – வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 930 மணி முதல் 11.00 மணி வரை
இணைப்பு :-
Join Zoom Meeting ID :-
https://us02web.zoom.us/j/5270753416?pwd=enYyVTVDSDlSZU92U0t4aC9meGNUQT09
Meeting ID: 527 075 3416
Passcode: tnsf2020
அன்புடன்
திரு. R. மாரியப்பன் ஆசிரியர்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், NCSC, விருதுநகர் மாவட்டம்.
பண்டைய தமிழர்களின் அளவை முறைகள்
மிகவும் விசித்திரமானவை. அந்தக்
காலக்கட்டங்களில் தமிழர்கள்
மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று பல
ஆய்வாளர்களும் , அறிஞர்களும்
கூறுகின்றனர். பூச்சரங்கள்
வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற
அளவினால் பயன்படுத்தும்
முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப்
பார்க்கலாம். பண்டைய கட்டடக்கலைகளிலும்
முழம் என்ற அளவையே தமிழர்கள்
பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப்
பல முழக்குச்சிகளை
( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள)
பயன்படுத்தியதாகத் ஆய்வாளர்கள்
கண்டறிந்து உள்ளார்கள். ஆகவே தமிழர்களின்
நீள அளவை முறைகள் தரப்படுத்தப்
பட்டுள்ளதை நாம் தீர்க்கமாகச்
சொல்லமுடியும். தமிழ் நாட்டிலும்,
கேரளத்திலும் பெரும் அளவான
கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப்படாமலும்,
அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலும்,
இருப்பதால் தென்னிந்தியாவின்
அறிவியலை முழுதாக இன்னும்
அறியமுடிவதில்லை. [1]
பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத்
தமிழர்கள் உழக்கு என்ற
அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச்
சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான
செப்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள்
தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும்
பயன்படுத்துவதைக் காணலாம்.
ஆகவே தமிழர்களின் அளவை முறைகள்
தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.
பின்வரும் பட்டியல், வாய்பாடுகள் பண்டைய
தமிழர்கள் உருவாக்கிய அளவை முறைகள்
ஆகும்.
பழந்தமிழர் அளவைகள், பெரும்பாலும்
இக்காலத்திலும் உள்ள தமிழர் அளவைகள்
ஆகும். அவை
1. எண்ணல்
2. நிறுத்தல்
3. முகத்தல்
4. பெய்தல்
5. நீட்டல்
6. தெறித்தல்
7. சார்த்தல்
எண்ணலளவை
ஒன்று, இரண்டு, மூன்று என்ற
எண்ணாகவோ வீசம், அரைக்கால், கால் என்ற
இலக்கமாகவோ, அல்லது பதாதி சேனாமுகம்,
குமுதம் எனத் தொகையாகவோ எண்ணிக்
கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும்.இந்த
எண்ணலளவை சிற்றிலக்கம்,பேரிலக்கம் என
இருவகைப்படுகிறது.
பேரிலக்கம்
ஒன்று, இரண்டு, மூன்று முதலிய
முழுவெண்கள் பேரிலக்கம் எனப்படும்.
1 - ஒன்று (ஒண்டு)
2 - இரண்டு
3 - மூன்று (மூண்டு)
4 - நான்கு
5 - ஐந்து
6 - ஆறு
7 - ஏழு
8 - எட்டு
9 - ஒன்பது
10 - பத்து
100 - நூறு
1000 - ஆயிரம்
எண் வாய்பாடு
10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்
சிற்றிலக்கம்
அரை கால், அரைக்கால் வீசம்(மாகாணி)
முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கம்
எனப்படும். சிற்றிலக்கத்தில்
கீழ்வாயிலக்கமென்றும்,
மேல்வாயிலக்கமென்றும் இருவகையுண்டு.
கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தோடு ஒப்பு நோக்கியே,
அரை, கால்,அரைக்கால் முதலியன மேல்வாய்ச்
சிற்றிலக்கமெனப்படும்.
மேல்வாயிலக்கம்
மேல்வாயிலக்கம் என்பதில் அடங்கும்
அலகுகள்
மேலரை(அரை)
மேற்கால்(கால்)
மேலரைக்கால்(அரைக்கால்)
மேல்வீசம்(வீசம்)
3/4 - முக்கால்
1/2 - அரைக் கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒரு மா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
மேல்வாய்ச் சிற்றிலகத்தில் அடிமட்ட எண்,
மேல்முந்திரி /முந்திரி = 1/320 ஆகும்.
மேல்வாயிலக்கம் குறிப்புகள்
மா: பரப்பளவில் மா என்பது ஒரு வேலியில்
1/20 ஒரு நில அளவான காணி அதிற்
காற்பங்காயிருந்திருக்கலாம். இவ் வீரளவைப்
பெயர்களும் நீட்டலளவையினின்று எண்ணலள
வைக்கு எடுத்தாளப் பெற்றதாகத் தெரிகின்றது.
மாத்தல் என்பது ஒரு வழக்கற்ற வினை.
மாத்தல் அளத்தல். மா+அனம் = மானம் =
அளவு, படி (மேலைவடார்க்காட்டு வழக்கு).
மா+திரம் = மாத்திரம்-மாத்திரை.
காணி காணிக்கப்பட்ட நிலஅளவு.
காணித்தல்- மேற்பார்த்தல்.
வீசம்: பிசு-விசு-விசுக்கு-விசுக்காணி =
சிறியது. விசு-வீசம்=சிற்றளவு. மாவும்
காணியும் சேர்ந்தது மாகாணி.
முந்திரி:முந்திரி என்னும் சொல்
ஒரு சிற்றெண்ணையும் ஒரு பழவகையையுங்
குறிக்கும். முந்திரிப்பழத்தின்
கொட்டை பழத்திற்கு வெளியே முன்
துருத்திக்கொண்டிருப்பதால், அப் பழம் அப்
பெயர் பெற்றது. முன்+துரி = முந்துரி-முந்திரி-
முந்திரிகை.
முந்து உருத்தது முந்திரி என்றுமாம்.
உருத்தல்-தோன்றுதல். முந்திரி என்னும்
கீழ்வாயிலக்கப் பெயரும் முந்தித்
தோன்றியதென்னும் பொருளதே.
கீழ்வாயிலக்கம்
1. கீழரை = 1/640,
2. கீழ்க்கால் = 1/1280
3. கீழரைக்கால் = 1/2560
4. கீழ்வீசம் = 1/5120
கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண்,
கீழ்முந்திரி = 1/102,400 ஆகும்.
கீழ்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்.
கீழ்வாய் இலக்கத்தின்
எண்மதிப்பு
கீழ்வாய்
இலக்கத்தின்
பெயர்
1/640 கீழரை
1/640 கீழரை
1/280 கீழ்க்கால்
1/2560 கீழரைக்கால்
1/5120 கீழ் வீசம்
1/102400 கீழ் முந்திரி
1/1075200 இம்மி
1/23654400 மும்மி
1/165580800 அணு
1/1490227200 குணம்
1/7451136000 பந்தம்
1/44706816000 பாகம்
1/312947712000 விந்தம்
1/5320111104000 நாகவிந்தம்
1/74481555456000 சிந்தை
1/489631109120000 கதிர்முனை
1/9585244364800000 குரல்வளைப்படி
1/575114661888000000 வெள்ளம்
1/57511466188800000000 நுண்மணல்
1/2323824530227200000000 தேர்த் துகள்
குறிப்பு
இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப்
புல்லரிசி. அது எள் தினை என்பனபோல்
சிற்றளவைப் பொருளாயிற்று.
சிறுமையை யுணர்த்தும் இல் என்னுஞ்
சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர்
தோன்றியிருக்கலாம். [2]
எண் கூற்று வாய்ப்பாடு
1 இம்மி 11 மும்மி
11 மும்மி 7 அணு
1 அணு 9 குணம்
1 குணம் 5 பந்தம்
1 பந்தம் 6 பாகம்
1 பாகம் 7 விந்தம்
7 விந்தம் 17 நாகவிந்தம்
1 நாகவிந்தம் 60 வெள்ளம்
1 குரல்வளைப்படி 60 வெள்ளம்
1 வெள்ளம் 100 நுண்மணல்
நிறுத்தலளவை
எடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல்.
எடுத்தலளவையில் பொன்னும் மணியும்
நிறுக்க ஒன்றும், பிற பொருள்களை நிறுக்க
ஒன்றுமாக இருவகையுண்டு.
பொன்நிறை யளவைக்குப் பொன்னிலக்கம்
என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின்,
அதுவும் பிற பொருள்போல் நிறுக்கப்படும்.
குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை,
துலாம் என படிக்கல்
கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல்
அளவை ஆகும். இந்த
எடுத்தலளவை பொன்னளவை,பிற
பொருளளவை என இருவகைப்படுகிறது. அரசு
முத்திரை இட்ட அளவுக்கல்லானது,
குடிஞைக்கல், பாடிக்கல், பண்டாரக்கல்
என்னும் பெயர்களுள் ஒன்றாற்
குறிக்கப்பட்டது. அதே அளவுக்கல்லானது,
நகரங்களில் நகரக்கல் எனப்பட்டது.
நிறுத்தல் அளவுக்கான
தராசு ஆறு வகைப்படும்.
1. மணித்தராசு - இது இரத்தினம்
முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு
2. பொன் தராசு - தங்கம்
போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு
3. உலோகத் தராசு - செம்பு,
பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந்
தராசு
4. பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும்
தராசு
5. கட்டைத் தராசு -
விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும்
தராசு. இது இரு புறமும் சதுர
மரப்பலகைகளைத் தட்டுக்களாகக்
கொண்டிருக்கும்.
6. தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு.
இது மரக்கம்பாலான துலாக் கோலின்
ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத்
தட்டால் ஆனது.
அளவைகள்
உளுந்து (grain) - 65 மி. கி.
குன்றிமணி - 130 மி. கி.
மஞ்சாடி - 260 மி.கி.
மாசம் - 780 மி.கி.
பனவெடை - 488 மி.கி
வராகனெடை - 4.2 கி.
கழஞ்சு - 5.1 கி.
பலம் - 41 கி. (35 கி.)
கஃசு அல்லது கைசா - 10.2 கி.
தோலா - 12 கி.
ரூபாவெடை - 12 கி.
அவுன்ஸ் - 30 கி.
சேர் - 280 கி.
வீசை - 1.4 கி.கி.
தூக்கு - 1.7 கி.கி.
துலாம் - 3.5 கி.கி.
பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு
பொன் அதிகமாக இருப்பினும், இந்த
அளவையே பின்பற்றப்பட்டது.
32
குன்றிமணி
1 வராகன் 1.067 கிராம்
10
வராகனெடை 1 பலம் 10.67 கிராம்
8 பலம் 1 சேர் 85.33 கிராம்
5 சேர் 1 வீசை 426.67 கிராம்
1000 பலம் 1 கா 10.67
கிலோகிராம்
6 வீசை 1 துலாம் 2.560
கிலோகிராம்
8 வீசை 1 மணங்கு 3.413
கிலோகிராம்
20 மணங்கு 1
கண்டி (பாரம்)
68.2667
கிலோகிராம்
பொன்னளவை
பொன்னையும்,மணியையும் நிறுக்கப்
பயன்படுகிறது. இது 'பொன்னிலக்கம்'
எனப்பட்டது.
பேரளவான பொன்னை நிறுக்க
ஆணிக்கல்லும், மிகப்பேரளவான
பொன்னை நிறுக்க, துலாம் கணக்கும்
பயன்படுத்தப்பட்டது.
பொன்னிலக்க அலகுகள்
பொன்னிலக்கம் என்பதன் அலகுகள்
4 நெல்லெடை = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பணவெடை வல்லம்
5 பணவெடை = 1 கழஞ்சு
10 வல்லம் = ஒரு கழஞ்சு = 16அவுன்சு
8 பணவெடை = 1 வராகனெடை
4 கழஞ்சு = 1 கஃசு
4 கஃசு = 1 பலம்
பொன்நிறுத்தல் வாய்ப்பாடு
1 நெல்
(எடை) 8.33
மில்லிகிராம்
4 நெல் 1 குன்றிமணி 33.33
மில்லிகிராம்
2 குன்றிமணி 1 மஞ்சாடி 66.67
மில்லிகிராம்
2 மஞ்சாடி 1 பணம்
(பணவெடை)*
133.33
மில்லிகிராம்
8 பணம்
(பணவெடை)
1 வராகன் 1.067 கிராம்
5 வராகன் 1 கழஞ்சு 5.33 கிராம்
4 கழஞ்சு 1 கஃசு 10.4 கிராம்
4 கஃசு 1 பலம் 41.6 கிராம்
1.5 கழஞ்சு 8 கிராம்
முகத்தலளவை
முகத்தளலவைக் கருவிகளுள்
ஒன்றான படி அல்லது நாழி
பால், மோர், நெய் போன்ற நீரியல்
பொருளை உழக்கு படிகளால்
மொண்டு எடுத்து அளப்பது முகத்தல்
அளவை ஆகும். முகந்து அளக்கப்படும்
பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும்,
சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவை
நெல்லிலக்கம் எனப்படும்.
முகத்தலளவை அலகுகள்
1. 2செவிடு = பிடி
2. 5செவிடு = 1 ஆழாக்கு
3. 2ஆழாக்கு = 1 உழக்கு
4. 2உழக்கு = 1 உரி
5. 2உரி = 1 நாழி
6. 8நாழி = 1 குறுணி(மரக்கால்)
7. 2குறுணி = 1பதக்கு
8. 2பதக்கு = 1தூணி(காடி)
9. 3தூணி = 1 கலம்
10. 400குறுணி = 1 கரிசை (பறை)
தனி முகத்தலளவைகள்
1. அரசு முத்திரையிட்ட அளவை நாழியும்
மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன்
பெயரினைத் தாங்கியிருந்தன.
(எடுத்துக்காட்டு:சோழாந்தகன் நாழி,
அருண்மொழித்தேவன் மரக்கால்)
1. கோயிற் பண்டாரத்தில் தெய்வப்பெயரினைத்
தாங்கியிருந்தன.
(எடுத்துக்காட்டு:ஆடவல்லான்
மரக்கால்,செப்புக்கால்
திருச்சிற்றம்பலமுடையான் மரக்கால்)
2. ஒவ்வொரு நாட்டிற்கும், சிறப்பான
பெருமுகத்தலளவும் உண்டு.
21 மரக்கால் = கோட்டை என
பாண்டி நாட்டில் அழைக்கப்பட்டது.
40 மரக்கால் = புட்டி என
வட சோழநாட்டில் அழைக்கப்பட்டது.
பெய்தல் அளவை
நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில்
சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும்.
360 நெல் = 1 செவிடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
5 மரக்கால் = 1 பறை
80 பறை = 1 கரிசை
48=96 படி = 1 கலம்
120 படி = 1 பொதி
1 படிக்கு
அவரை = 1,800
மிளகு = 12,800
நெல் = 14,400
பயறு = 14,800
அரிசி = 38,000
எள் = 1,15,000
கரண்டி அளவுகள்
1 தேக்கரண்டி - 4 மி.லி
1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி)
1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி
1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி)
1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 பாலாடை - 30 மி.லி
1 எண்ணெய்க்கரண்டி - 8 பாலாடை (240 மி.லி)
முகத்தல் (நீர்ம) வாய்ப்பாடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 குறுணி (மரக்கால்)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
நீட்டலளவை
விரல் , சாண் , முழம் என
நீளத்தை கை அல்லது கால்களால்
அளப்பது நீட்டல்
அளவை ஆகும்.நீட்டலளவை வழியளவை,
நிலவளவை என இருவகைப் படுகிறது.
10 கோண் = 1 நுண்ணணு
10 நுண்ணணு = 1 அணு
8 அணு = 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் = 1 துசும்பு
8 துசும்பு = 1 மயிர்நுனி
8 மயிர்நுனி = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 சிறு கடுகு
8 சிறு கடுகு = 1 எள்
8 எள் = 1 நெல்
8 நெல் = 1 விரல்
12 விரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 பாகம்
6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
4 காதம் = 1 யோசனை
வழியளவை
1. 8 தோரை( நெல் ) = 1 விரல்
2. 12 விரல் = 1 சாண்
3. 2 சாண் = 1 முழம்
4. 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
5. 2000 தண்டம் = 1 குரோசம் 21/4 மைல்
6. 4 குரோசம் = 1 யோசனை
7. 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)
8. 4840 சதுர கெசம் = 1 ஏக்கர்
9. 436 குழி = 1 ஏக்கர்
10. 5 பர்லாங்கு = 1 கிலோமீட்டர்
11. 8 பர்லாங்கு = 1 மைல்
நிலவளவை
இது குழிக்கணக்கு எனப்படும்.
அவை வருமாறு;-
1. 16 சாண் = 1 கோல்
2. 18 கோல் = 1 குழி
3. 100 குழி = 1 மா
4. 240 குழி = 1 பாடகம்
5. 20 மா = 1 வேலி
6. 1 மரக்கால் வேலைபாடு (நெல்
நடவுக்கு தேவையான விதைகள்) - 8 சென்ட்
7. 12.5 மரக்கால் வேலைபாடு - 100 சென்ட் -
1 ஏக்கர்
8. 40 மரக்கால் = 1 புட்டி
9. 1 குழி - 100 சதுர அடி
10. 1 மா - 100 குழி (10000 சதுர அடி)
11. 1 காணி - 4 மா (40000 சதுர அடி = 92
சென்ட் = 0.92 ஏக்கர்) - 400 குழி
12. 1 வேலி - 7 காணி (6.43 ஏக்கர் = 2.6
ஹெக்டர்)
13. 1 பர்லாங்கு - 220 கெசம் (660 அடி)
14. 1 நிலம் (ground) - 2400 சதுர அடி - 5.5
சென்ட் - 223 சதுர மீட்டர்
குறிப்பு
செய் என்ற ஒரு நில அளவு, சங்க காலத்தில்
இருந்தது.
நிலவரி முறை - நிலவரியை கணிக்க
நிலவளவை நடத்தின அதிகாரி உலகளந்தான்
எனப்பட்டான்.
அவன் கையாண்ட அளவுகோல், உலகளந்த
கோல் எனப்பட்டது.
இம்முறை முதலாம் இராசராசன்
காலத்தில் ஒரு முறையும்,முதற்
குலோத்துங்கன் காலத்தில் ஒருமுறையும்,
மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில்
ஒரு முறையும் அளக்கப்பட்டது.
இறையிறுக்குங்கோல், குடிதாங்கிக் கோல்
எனப்படும் அளவைகள், நாட்டின்
எல்லை மாறும் போதெல்லாம் அளக்க
பயன்பட்டது.
நிலங்கள் மிக நுட்பமாக அளக்கப்பட்டன.
எடுத்துக்காட்டு
“ ஆக இறையிலி நீங்கு நிலம்
முக்காலே
இரண்டு மாக்காணி அரைக்காணி
முந்திரிகைக்கீழ்
அரையே இரண்டுமா
முக்காணிக் கீழ்
முக்காலே நான்குமா
அரைக்காணி முந்திரைக் கீழ்
நான்கு மாவினால்
இறை கட்டின
காணிக்கடன்"(சோ.,பக்.58)
”
- இதில் குறிக்கப்பட்ட நில
அளவு 1/52,428,800,000 வேலி.
கால வாய்ப்பாடு /
தெறிப்பு அளவை
நொடி, நாழிகை, நாள் என காலத்தைக்
கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.
1 குழி (குற்றுழி) = 6.66 மில்லி செகன்ட்
(கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும்
நேரம்)
10 குழிகள் = 1 கண்ணிமை (66.6666
மில்லி செகன்ட்)
2 கண்ணிமை = 1 கைநொடி (0.125 செகன்ட்)
2 கைநொடி = 1 மாத்திரை (0.25 செகன்ட்)
6 கண்ணிமை = 1 சிற்றுழி (நொடி) (0.40
செகன்ட்) (ஒரு நீருள்ள பாத்திரத்தில் மூங்கில்
குழலால் ஊதும் பொழுது ஏற்படும்
குமிழியானது ஒரு சாண் அளவு உயரும்
நேரம்)
2 மாத்திரை = 1 குறு (0.5 செகன்ட்)
2 நொடி = 1 வினாடி (0.8 செகன்ட்)
ஒரு மனிதனின் இதயம் ஒரு முறை துடிக்கும்
நேரம்
2 குறு = 1 உயிர் (1 செகன்ட்)
5 நொடிகள் = 2 உயிர் = 1 சாணிகம் = 1/2
அணு (2 செகன்ட்)
10 நொடிகள் = 1 அணு ( 4 செகன்ட்)
6 அணு = 12 சாணிகம் = 1 துளி = 1
நாழிகை வினாடி (24 செகன்ட்)
10 துளிகள் = 1 கணம் (4 நிமிடம்)
6 கணம் = 1 நாழிகை (24 நிமிடம்)
10 நாழிகை = 4 சாமம் = 1 சிறுபொழுது =
240 நிமிடம் = 4 மணிநேரம்
6 சிறுபொழுது = 1 நாள் = 24 மணிநேரம்
7 நாள் = 1 கிழமை (1 வாரம்)
2 1/2 நாழிகை = 1 ஓரை
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 அழுவம் (பக்கம்)
29.5 நாள் = 1 திங்கள் (30 நாள் = 1 மாதம்)
2 திங்கள் = 1 பெரும்பொழுது
6 பெரும்பொழுது = 1 ஆண்டு
64 ஆண்டு = 1 வட்டம்
4096(=8^4) = 1 ஊழி
சிறுபொழுது
1. காலை - முதல் சிறுபொழுது - 1 சாமம்
முதல் 4 சாமம் வரை ( 6 முதல் 10 மணி வரை)
2. நண்பகல் - இரண்டாம் சிறுபொழுது - 5
சாமம் முதல் 8 சாமம் வரை (10 முதல் 2
மணி வரை)
3. ஏற்பாடு - மூன்றாம் சிறுபொழுது - 9
சாமம் முதல் 12 சாமம் வரை (2 முதல் 6
மணி வரை)
4. மாலை - நான்காம் சிறுபொழுது - 13 சாமம்
முதல் 16 சாமம் வரை (6 முதல் 10
மணி வரை)
5. இடையாமம் - ஐந்தாம் சிறுபொழுது - 17
சாமம் முதல் 20 சாமம் வரை (10 முதல் 2
மணி வரை)
6. வைகறை - ஆறாம் சிறுபொழுது - 21
சாமம் முதல் 24 சாமம் வரை (2 முதல் 6
மணி வரை)
பெரும்பொழுது
1. கார் - ஆவணி, புரட்டாசி
2. கூதிர் - ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனி - மார்கழி, தை
4. பின்பனி - மாசி, பங்குனி
5. இளவேனில் - சித்திரை, வைகாசி
6. முதுவேனில் - ஆனி, ஆடி
சார்த்தல்
சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக்
கூறி “இப்படி”, “அதைப்போல”
என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல்
அளவை ஆகும்.
நாணயம்
1 பல் - 0.9 உளுந்து (கிரைன்)
8 பல் - 1 செங்காணி (செப்பு) - 7.2
உளுந்து (கிரைன்)
0.25 செங்காணி - 1 கால் காணி - 1.8
உளுந்து (கிரைன்)
64 பல் - 1 காணப்பொன் (காசுப்பணம் (பொன்))
- 57.6 உளுந்து (கிரைன்)
1 இரோமானிய தினாரியம் 2
காணப்பொன்னுக்கும், 1
செங்காணிக்கு கொடுத்து வர்த்தகம்
செய்யப்பட்டது - 124 உளுந்து (கிரைன்)
12 பை - 1 அணா
16 அணா - 1 ரூபாய்
பிற்கால நாணய அளவை
1 அணா - 3 துட்டு
1/4 அணா - 3/4 துட்டு
4 அணா - 25 பைசா
8 அணா - 50 பைசா பணம் -
வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு
காண்க
தொல்காப்பியம் சுட்டும் அளவைப்பெயர்கள்
ஆதாரங்கள்
தேவநேய பாவாணரின்
படைப்புகளிலிருந்து விக்கியாக்கம்
செய்யப்படுகிறது. அவரது படைப்புகளை
இங்கு காணலாம்.
TAMILNADU SCIENCE FORUM. VIRUDHUNAGAR DISTRICT, NCSC 2021
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2020
போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு.
https://drive.google.com/file/d/16_pBwXM7u6_KZMsMxJcGqCcQaj2GchDj/view?usp=drivesdk
*தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு முன்னிட்டு, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசுத் தேர்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது*
NMMS தேசிய திறனாய்வுத் தேர்வு -2021
🔮அதன்படி, 2021-ம் ஆண்டு பிப்ரவரி 21 -ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்புப் பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔮மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 05.01.2021 முதல் 12.01.2021 வரை பதிவு செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினைப் பதிவு செய்தவுடன் பெரும்பாலான விவரங்கள் உடனடியாகத் திரையில் தோன்றும்.
🔮அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். புதியதாக பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு செய்தபின் புதியUSER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
*பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:*
2. தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டுச் சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
4. பள்ளி முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் பதிவு செய்யப்படவேண்டும்.
5. வீட்டு முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினைப் பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.
6. பெற்றோரின் தொலைபேசி/ கைபேசி என்ற இடத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிய வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற இடத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினைப் பதிந்தால் போதுமானது.
7. பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.
8. 05.01.2021 பிற்பகல் முதல் 12.01.2021 வரை பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் 12.01.2021 –க்குள் சரி செய்து கொள்ளலாம். அதன்பின் கண்டிப்பாக மாற்ற இயலாது.
🔮பதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report மற்றும் தேர்வர்களின் விவரத்தினை (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம்) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் 20.01.2021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔮மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளிடமிருந்து பெறும் தொகையை ரொக்கமாகச் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.01.2021 அன்று சமர்ப்பிக்க வேண்டும்.
🔮மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களின் தேர்வுக் கட்டணத் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதிசெய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
🔮விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம்: 05.01.2021 - 12.01.2021 விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 12.01.2021 Summary Report தொகையை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள்: 13.01.2021 - 20.01.2021
🔮மாவட்டக் கல்வி அலுவலர்கள் ரொக்க தொகையை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள். 25.01.2021.👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏