Sunday, 28 February 2021

தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 59

 தமிழ் இணையக் கழகம் வழங்கும்

இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 59



தேதி: 28- 02- 2021 அன்று ஞாயிறு மாலை திரு. ப. கருணைதாஸ் அவர்கள் "கற்றல் கற்பித்தல் வளங்களை Waklet மூலம் எவ்வாறு தொகுப்பது?“ என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை

வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம் https://m.teamlink.co/5526828256

இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....

Wednesday, 24 February 2021

ஏப்ரல் 15க்குள் அனைத்துப் பாடங்களும் நடத்தி முடிக்க வேண்டும்- கல்வி செயலர் உத்தரவு

 ஏப்ரல் 15க்குள் அனைத்துப் பாடங்களும் நடத்தி முடிக்க வேண்டும்- கல்வி செயலர் உத்தரவு!



Tuesday, 23 February 2021

DEO PROMOTION DIRECTOR ORFER!

 _*26 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!*_

☝️☝️☝️

பள்ளி கல்வித்துறை இடைக்கால பட்ஜெட் முழுவிவரம்

 பள்ளி கல்வித்துறை இடைக்கால பட்ஜெட் முழுவிவரம் – 6 முதல் 10 வகுப்பு வரை கணினி பாடம் அறிமுகம்


 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2021-22 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்தாா். பள்ளி கல்வித்துறை அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.


பள்ளிக்கல்வி:


குழந்தைகளுக்கு  உயர்தரக்  கல்வியை  வழங்குவது இந்த  அரசின் உயர்ந்த முன்னுரிமையாகும். எனவே, பள்ளிக் கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21ஆம்   ஆண்டிற்கான வரவு-செலவுத்  திட்ட மதிப்பீடுகளில் 34,181.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2011-12ஆம்  ஆண்டு முதல் 273 தொடக்கப் பள்ளிகள்  திறக்கப்பட்டுள்ளன. 127 தொடக்கப்  பள்ளிகள்  நடுநிலைப் பள்ளிகளாகவும், 1,115 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 644 உயர்நிலைப்  பள்ளிகள்  மேல்நிலைப்  பள்ளிகளாகவும்  தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 


தொடக்கக்  கல்வியில்  மாணவர்  நிகர  சேர்க்கை விகிதம் 99.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. பள்ளி இடைநிற்றல் விகிதம் 0.75சதவீதமாகக் குறைந்துள்ளது. மதிய சத்துணவு, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்,  மடிக்கணினிகள்,  சீருடைகள்,  காலணிகள், பள்ளி புத்தகப்பைகள், கிரையான்கள், வண்ண பென்சில்கள், வடிவியல் பெட்டிகள் மற்றும் நிலவரைபடப்புத்தகங்கள்,  இலவசப்பேருந்து  அட்டை மற்றும்  விலையில்லா  மிதிவண்டி  வழங்குதல்  போன்றவை  தொடர்ந்து செயல்படுத்தப்படும்.


இந்தத்திட்டங்கள்   தொடர்வதற்காக, 2020-21 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மொத்தம் 3,703.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான  இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம்,  2009, பிரிவு  12(1)(உ)இன் படி, இதுவரை 5,61,111  குழந்தைகள்  தனியார்  பள்ளிகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, மொத்தம் 1,324.28 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் தனியார் பள்ளிகளுக்கு திருப்பியளிக்கப்பட்டுள்ளது.


கோவிட் – 19  பெருந்தொற்று  காலத்தில், மாணவர்கள்  இடைவிடாமல் தொடர்ந்து கல்வி  கற்பதை  உறுதி செய்வதற்காக, 1  ஆம்  வகுப்பு  முதல்  12  ஆம்  வகுப்பு  வரை  பயிலும் அனைத்து   மாணவர்களுக்கும்   இலவசமாக   பாடப்புத்தகங்களை   அரசு வழங்கியது. 12ஆம் வகுப்பிற்கு, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் 1,912வீடியோ பாடங்கள்,மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டன.


இதனால் 4,20,624  மாணவர்கள்  பயனடைந்தனர்.  5,522 வீடியோ  பாடங்கள் தயாரிக்கப்பட்டு,  கல்வி  தொலைக்காட்சி  வாயிலாக  ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அரசின்  சார்பாக 10 இதர தனியார் தொலைக்காட்சிகளும்  கல்வி  சார்ந்த  நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பு செய்கின்றன. 


மாணவர்களுக்கான    பாடங்கள்    பல்வேறு இணையதளங்களில் மின்னணு தொகுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன. தகவல்   தொடர்பு   தொழில்நுட்பம் வாயிலாக தரமான  கல்வியை, பள்ளிகளில் வழங்குவதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல்  பாடத்திட்டத்தின்ஒரு  பகுதியாக  தகவல்  தொடர்பு தொழில்நுட்பக்  கல்வியை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு  மேற்கொண்டுள்ளது.  மேலும்,  6,029  அரசு  உயர்நிலை  மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  520.13  கோடி  ரூபாய்  மதிப்பீட்டில்  உயர் தொழில்நுட்ப  ஆய்வகங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.


இதுவரையில்,கணிப்பொறி  அறிவியல்  பாடப்பிரிவானது  11  மற்றும்  12  ஆம் வகுப்புகளுக்கு  மட்டும்  தனிப்பாடமாக  கற்பிக்கப்பட்டு  வருகிறது. தற்போது,அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6  ஆம்  வகுப்பு  முதல்  10  ஆம்  வகுப்பு  வரையிலான  மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு, பட்ஜெட் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்குரல் அருணாசலம்

+2 First Mid Term Exam

 


RMSA மாவட்ட அளவில் திறனறி போட்டி

 RMSA மாவட்ட அளவில் திறனறி போட்டி



Tenth Mid Term Exam Time Table 2021

 Tenth Mid Term Exam Time T


able 2021

பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை


 

 

NMMS MAT and SAT QUESTION Paper


https://tnpallinews.blogspot.com/2021/02/blog-post_21.html



Sunday, 21 February 2021

விடுமுறை நாட்களில் வேலை செய்தால் அதற்காக ஈடுசெய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்

 விடுமுறை நாட்களில்  வேலை செய்தால் அதற்காக  ஈடுசெய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்பது அரசின் விதி. பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் பார்க்கக் கூடிய NTSE,Trust,NMMS போன்ற தேர்வுகளுக்கு எத்தனை நாள் பணி செய்கின்றோமோ அதற்கு இணையான நாள் ஈடுசெய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். 


 (பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை G.O MS.No.309, நாள்: 16.08.1993.) .இன்று  தேர்வு பணிக்கு செல்கின்ற ஆசிரியர்கள் மறக்காமல் வருகை சான்றுபெற்றுக் கொண்டு அதனை பயன்படுத்தி ஈடுசெய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக 20 நாட்கள் ஒரு காலண்டர் வருடத்திற்கு விடுமுறை நாளில் பணி செய்ததற்காக ஈடுசெய் விடுப்பு (G.O.Ms.No.2218, Misc.Dt.14-12-1981) எடுத்துக்கொள்ளலாம்.

Friday, 19 February 2021

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தடை!

 🌹 *Flash News*


உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கூடாதென்று உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் தொடுத்த வழக்கில் தீர்ப்பு!

நாளை நடைபெறவிருந்த உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு *இடைக்காலத் தடை* வழங்கப்பட்டுள்ளது.

Thursday, 18 February 2021

*SGT to BT Promotion Counselling

 *SGT to BT Promotion Counselling!*

Date: 21.02.2021 (Sunday)

Place : SIEMAT Conference Hall, DPJ Campus, Chennai.

English : 1 to 200

Maths : 1 to 160

Science : 1 to 143

Sunday, 14 February 2021

திருக்குறள் கூறுவதில் உலக சாதனை நிகழ்த்திய ஊராட்சி ஒன்றிய மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவி காவியாஸ்ரீ க்கு ரூ.ஒரு இலட்சம் பரிசினை சிவகாசி அரிமா சங்கம் வழங்கியது.

 திருக்குறள் கூறுவதில் உலக சாதனை நிகழ்த்திய ஊராட்சி ஒன்றிய மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவி காவியாஸ்ரீ க்கு ரூ.ஒரு இலட்சம் பரிசினை சிவகாசி அரிமா சங்கம் வழங்கியது. பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையான ரூ. ஒரு இலட்சத்தினை விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.பாலதண்டாயுதபாணி அவர்கள் வழஙகினார்.



 


ஆசிரியர் தேர்வு வாரியம்* *முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்பு_2021*

 *ஆசிரியர் தேர்வு வாரியம்*

*முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்பு_2021*


*காலிப் பணியிடங்கள் - 2098 (1863+235)*


*தமிழ் - 279*

*ஆங்கிலம் - 211*

*கணிதம் - 132*

*இயற்பியல் - 113*

*வேதியியல் - 202*

*தாவரவியல் - 105*

*விலங்கியல் - 115*

*வரலாறு - 121*

*வணிகவியல் - 327*

*பொருளியல் - 357*

*கணினி பயிற்றுநர் - 39*


*கல்வித் தகுதி: (10+2+3+2 + B.Ed 1 or 2)*


*வயது வரம்பு:*

*பொது பிரிவினர் - 40*

*இதர பிரிவினர் - 45*

*(BC, MBC/DNC, BCM, SC, SCA, ST 01.07.1976 க்கு பின் பிறந்த அனைவரும் எழுதலாம்)*

Saturday, 13 February 2021

PG - பதவி உயர்வு கலந்தாய்வு

 *PG - பதவி உயர்வு கலந்தாய்வு* 


இயற்பியல் வேதியியல் உயிரியல் விலங்கியல் பாடங்களுக்கு இறுதி (FINAL LIST) பேனல் வெளியிடாததால் - *நாளை* சென்னையில் கலந்தாய்வு இல்லை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.சென்னை நோக்கி பயணம் மேற்கொள்ள வேண்டாம்


 *TNHHSSGTA-மாநில மையம்*

Thursday, 11 February 2021

கின்னஸ் சாதனை- சிவகாசி ஊராட்சி ஒன்றியப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி

 கின்னஸ் சாதனை- சிவகாசி ஊராட்சி ஒன்றியப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி!

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி கல்வி மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியம், மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி காவியாஸ்ரீ 500 திருக்குறளை பொருளோடு கூறி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 14.2.2021 அன்று நடைபெற உள்ளது.




Tuesday, 9 February 2021

CIET NCERT - ONLINE QUIZ - SAFER INTERNET DAY

 CIET, NCERT in association with ISEA, C-DAC had launched quiz on the occasion of SAFER INTERNET DAY. Please participate in  Quiz with help of  the following link


 https://www.infosecawareness.in/sidquiz


My certificate is in the first comment.


Add yours too if you receive after attempting 👍🏻.

Monday, 8 February 2021

1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன்!

 தமிழகத்தில் 9, 11ம் வகுப்புகளுக்கு இன்று (பிப்ரவரி 8) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கு (1 முதல் 8 வரை) பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டன. மேலும் ஆண்டு இறுதித்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ‘டேப்’ – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

அதற்காக மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக பள்ளிகளில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு. ஆங்காங்கே ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உடன் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் அல்ல – சமஸ்கிருதம், ஹிந்தி கட்டாயம்!!

பெரிதாக கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தால் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு இன்று முதல் (பிப்ரவரி 8) 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. இது தொடர்பாக டி.என்.பாளையத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், திட்டமிட்டபடி 9, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!!

மேலும் முழு கல்விக் கட்டணத்தை செலுத்தினால் தான் பொதுத்தேர்வு எழுத அனுமதிப்போம் என கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய அளவில் பள்ளிக்கல்வித்துறை தற்போது முதல் இடத்திற்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பிற வகுப்புகளுக்கு (1 முதல் 8 வரை) பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

Sunday, 7 February 2021

Thursday, 4 February 2021

Tuesday, 2 February 2021

CBSE பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தேதி வெளியீடு!

 CBSE பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தேதி வெளியீடு!



Monday, 1 February 2021

"Cyber Safety and Security "National Level Quiz for Teacher and Student.

 Dear all it is requested to share this all teachers and students. As one of the concern area is cyber safety and security, a series of webinar is being conducted through YouTube. On 9 Feb a quiz will be launched based on these sessions to certify teachers and students.



FLASH NEWS-வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுகிறது- முதலமைச்சர்

 FLASH NEWS-வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுகிறது- முதலமைச்சர்