*SMC/SMDC online Training (School Level)*
SMC உறுப்பினர்களுக்கான பள்ளி அளவிலான பயிற்சி ஜனவரி 4 முதல் தொடங்க வேண்டும்.
பள்ளி அளவிலான பயிற்சியில் SMC/SMDC இல் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கான வருகைப் பதிவேடு இன்று மாலை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்..
பயிற்சியில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு தேநீர் & வடை வழங்க வேண்டும். இதற்கான செலவினம் ஓரிரு நாட்களில் வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்க வேண்டும். மேலும், சமூக தணிக்கை படிவம் நிரப்பி கையெழுத்து பெறப்பட வேண்டும்.
இப்பயிற்சியானது தலைமை ஆசிரியர்கள் & ஆசிரியர்கள் பங்கேற்ற முறை போன்றே உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும்.
ஆனால், கணினி அல்லது லேப்டாப் அல்லது மொபைல் மூலமாக ஆசிரியருடைய login details ஐ பயன்படுத்தி அனைவரையும் கலந்து கொள்ளச் செய்யலாம்..
Projector வசதி கொண்ட பள்ளிகள் அதனை பயன்படுத்திக் கொண்டால், உறுப்பினர்களிடையே நல்லதொரு மனப்பான்மையை உருவாக்க முடியும்.
பள்ளியிலுள்ள Speakers ஐயும் பயன்படுத்திக் கொள்ளுதல் நலம்...
லேப்டாப் அல்லது projector வசதி இல்லாத பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உறுப்பினர்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பயிற்சியானது தங்கள் பள்ளியிலேயே நடைபெறுவதால் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வதை பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.
மிக மிக அருகாமையில் உள்ள பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் உள்ள வசதிகளை பங்கீடு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
*பயிற்சி நாட்கள்*
04.01.2021 முதல் 07.01.2021 வரை
மேற்கண்ட நாட்களில் ஏதாவது ஒரு நாளை பள்ளிகள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நாளை ஆசிரியர் பயிற்றுநரிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயிற்சி நடத்துவதற்கான உதவிகளை தங்கள் பள்ளிக்கான ஆசிரியர் பயிற்றுநர் செய்து தருவார்...
No comments:
Post a Comment