அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆளில்லா குட்டி விமானம் செய்ய பயிற்சி!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி கல்வி மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிவகாசி தொழில்நகர் அரிமா சங்க உதவியுடன் ஆளில்லா குட்டி விமானம் உருவாக்க நேரடி பயிற்சி நாளை(15.03.2021)ல் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு சென்னையில் இருந்து திரு.கிருஷ்ணமூர்த்தி என்பவர் பயிற்சி அளிக்க உள்ளார். பயிற்சியினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுபவர் சுகம் வர்மா, Junior Research Fellowship ,ISRO. பயிற்சி துவக்க விழாவில் சிவகாசி தொழில்நகர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர், தலைவர்,செயலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். நாரணாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். நிகழ்சியினை கார்த்திக் (விங் விசார்ட் ) ஒருங்கிணைக்கிறார்.

Great initiative
ReplyDeleteGreat initiative
ReplyDeleteGreat effort & initiative... Good luck
ReplyDelete