Thursday, 24 December 2020

Inspire Award 2020-21 விருதுநகர் மாவட்டத்தில் 47 மாணவ மாணவிகளின் செயல்திட்டம் தேர்வு!




 மத்திய அரசானது மாணவ மாணவியர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மையினை பள்ளிப்பருவத்திலேயே வளர்த்திடும் பொருட்டு 2010 கல்வி ஆண்டு முதல் இன்ஸ்பயர் விருது என்னும் தேசிய அறிவியல் போட்டியை வருடந்தோரும் நடத்தி வருகிறது. இந்த போட்டிக்கு மாணவர்களின் செயல்திட்ட மாதிரி திட்டத்தினை பள்ளி வழியாக இணையம் மூலம் பதிவு செய்திட வேண்டும். அதில் சிறந்த செயல்திட்டத்தினை மத்திய அரசு மாவட்ட வாரியாக தேர்வு செய்கிறது. தேர்வு செய்யப்பட்ட செயல்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.10,000 வழஙகுகிறது. அத்தொகையில் தனது மாதிரி செயல்திட்டத்தினை செயல்திட்டமாக மாற்றி மவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலும் அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். இந்த ஆண்டு கலாம்  ஆகலாம் என்ற அறிவியல் கழகம் மூலம் இன்ஸ்பயர் விருதுக்கான பயிற்சி முகாம் இணைய வழியில் நடைபெற்றது. இதனால் பல மாணவர்கள் பயனடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 47 மாணவ மாணவிகள் இன்ஸ்பயர் விருதுக்குத் தேர்வாகி உள்ளனர்.

No comments:

Post a Comment